நாட்டின் வானிலை மாற்றம்!

நாடு முழுவதிலும் இன்று சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய தினம் அதிகாலை வேளையில் சப்ரகமுவ, மேல், மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பனி மூட்டத்துடனான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அநேக பகுதிகளில் மழையின்றிய ஓர் வானிலையை இன்று எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.