வெண்ணிற உடையில், பொன்னிற மேனியுடன் அதுல்யா.!

நடிகை அதுல்யா ரவி டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர். அதுல்யா நடித்து இருக்கும் பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது.

இதன் பின்னர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய ஏமாளி படத்தில் முக்கிய காதாப்பாத்திரத்தில் அதுல்யா நடித்து இருந்தார். காதல் கண்கட்டுதே படம் தான் அதுல்யாவிற்கு நல்லஅடையாளத்தை கொடுத்தது என கூறலாம். தொடர்ந்து அதுல்யா சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்து இருக்கின்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான முருங்கக்காய் சிப்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

சமூக வலைத்தளங்களில் நடிகை அதுல்யா எப்பொழுதும் பிசியாக இருப்பவர். மேலும், இணையத்தில் அதுல்யா வெளியிடும் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

 

View this post on Instagram

 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

தற்போது நடிகை அதுல்யா ரவி அடுத்ததாக பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாணுடன் பெயரிடப்படாத புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படம் ஆக்ஷன் படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதுல்யா வெள்ளை நிற உடையில் அழகாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.