பட்டிதொட்டி எங்கும் கலக்கிய புஷ்பா படம் இத்தனை கோடி வசூலா?

தெலுங்கு சினிமாவின் டாப் நாயகன் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா.

‘எப்போதும் ஸ்டைலாக படங்கள் நடிக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் வித்தியாசமான லுக்கில் சந்தன கடத்தல் பற்றிய கதையில் நடித்துள்ளார். முதல் பாகம் அண்மையில் வெளியாக நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

சமந்தாவின் ஸ்பெஷல் நடனம், ராஷ்மிகாவின் குத்தாட்டம் போடக்கூடிய ஒரு பாடல் என படத்தில் முக்கியமாக பேசப்பட்டன.

வசூல் வேட்டை நடத்திவரும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.