மின்சார மற்றும் எரிசக்தி துறையில் பணியாற்றும் 25ஆயிரம் பணியாளர்கள் ஒரே தொழிற்சங்க கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்த புதிய கட்டமைப்புக்கு இலங்கை மின்சாரசபையின் பணியாளர் சங்கம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் மின்சார சபையை நிதி ரீதியாக பலப்படுத்தல், குறைந்த விலை மின்சார உற்பத்தியை ஊக்குவித்தல், மலிவு விலையில் பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்குதல், வெளியிட பங்குதார்களுடன் வலுவான உறவைப் பேணுதல், அதி நவீன தொழிற்பாட்டை அடைதல் போன்ற நோக்கங்களை கொண்டு இந்த கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை பணியாளர்களின் உரிமைகளையும் வென்றெடுப்பது மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து காப்பாற்றும் செயற்பாடுகளை இந்த கட்டமைப்பு மேற்கொள்ளவுள்ளது.
புதிய கட்டமைப்புக்கு பொதுச்செயலாளர்களாக உபுல் சாந்த மற்றும் எஸ் டி நிசாந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்த புதிய கட்டமைப்பு, அரசாங்கங்கங்கள் மின்சாரத்துறை தொடர்பில் எடுக்கும் தனித்தீர்மானங்களின்போது பாரிய சவால்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது