இலங்கைக்கு எண்ணெய் வழங்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உள்ள விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து கடன் அடிப்படையில் அடுத்த மாதம் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யப் போவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

ஜனவரி 23 அல்லது 24ஆம் திகதிகளில் கச்சா எண்ணெய் கையிருப்பு இலங்கைக்கு வழங்கப்படும் என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க(Sumith Wijesinghe) தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களுக்குள் 540,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என தலைவர் தெரிவித்தார்.

இந்த கொள்முதல்கள் ஒரு அரச வங்கியால் திறக்கப்பட்ட கடன் கடிதங்கள் மூலம் கடனில் செய்யப்படுகின்றன. கடன் கடிதங்களில் பட்டியலிடப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் பணம் செலுத்தும் திகதி தீர்மானிக்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.