மெலிந்து இளைத்து போன சமந்தா

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியிருக்கிறார் சமந்தா. கருப்பு நிற உடையில் தான் அழகாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அதற்கு காரணம், சமந்தா அநியாயத்திற்கு ஒல்லியாக இருப்பது தான்.

அவர் கடுமையாக ஒர்க்அவுட் செய்து ஒல்லியாகியிருக்கிறாரா இல்லை விவாகரத்தான கவலையில் இப்படி ஆகிவிட்டாரா என்று தெரியவில்லையே என்கிறார்கள் ரசிகர்கள்.

உங்களை இப்படி பார்க்கவே பாவமாக இருக்கிறது. உடம்பை பார்த்துக்கோங்க என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கெரியரை பொறுத்தவரை யசோதா படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. பான் இந்திய படமாக உருவாகி வரும் அதை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கி வருகிறார்கள்.

த்ரில்லர் படமான யசோதாவை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

படப்பிடிப்பை 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். யசோதா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். மேலும் மலையாள நடிகரான உன்னி முகுந்தனும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)