உலகை அச்சுறுத்தி வரும் புதிய வகை Omicron வைரஸின் அறிகுறிகளில் ஜலதோஷமும் சேர்க்கப்ட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளை கதிகலங்க வைத்து வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய Omicron வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
சாதராண கொரோனா வைரஸ் மற்றும் டெல்டா வைரஸின் அறிகுறிகள் தான் Omicron வைரசிலும் காணப்படுவதாக அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் Omicron தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் அடிக்கடி மூக்கடைப்பு, வறட்டு இருமல் மற்றும் உடல் வலி ஆகிய அறிகுறிகள் இருந்ததாகவும் குறிப்பாக குறைந்த முதுகுவலியுடன் தொண்டை அரிப்பு அல்லது தொண்டையில் புண் இருந்ததாகவும் தென் ஆப்பிரிக்கா தனியார் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் Omicron குறித்து ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் UK’s Zoe Covid செயலியில் வைரஸின் அறிகுறிகளில் ஜலதோஷத்தையும் சேர்த்துள்ளனர்.
மேலும் ஜலதோஷம் பிடித்த நபர்களை பரிசோதனை செய்கையில் அவர்களுக்கு Omicron அல்லது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.