நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பினால் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

நாட்டில் தற்போது, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஆடம்பர வாகனங்களை பயன்படுத்த முடியாது எனக் கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தானே முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.

பொருளாதார கஷ்டங்கள் காரணமாக முச்சக்கர வண்டியில் பயணிப்பதிலும் மக்களுக்கு சிரமமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஹர்ச டி சில்வா ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.

எது எப்படி இருந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, தொடர்ந்தும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்வாரா அல்லது இது ஊடக கண்காட்சியா என்பதை அறிய மேலும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.