முதல் படத்தின் இசை வெளியீட்டிலேயே சர்ச்சையாக பேசிய பிரச்சனையில் சிக்கிக்கொண்டவர் அஸ்வின். குக்வித் கோமாளி மூலம் பிரபலமாகிய அஸ்வின் அடுத்தடுத்த படங்களிலும் ஆல்பம் பாடகளிலும் நடித்து வந்தார். அவரின் முதன் படமான என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டில் 40 இயக்குனர்கள் கதை கூறும் போது தூங்கிவிட்டேன் என்று கூறியது தான்.
அதிலிருந்து இன்று வரை நெட்டிசன்களும் சரி சினிமா பிரபலங்களும் சரி கலாய்த்து வருகிறார்கள். அதற்காக மன்னிப்பு கேட்டு பேசியிருந்த அஸ்வின் சமீபத்தில் நான் என்ன பேசினாலும் டிரெண்டிங் ஆகிவிடுகிறேன். அது என் படத்திற்கும் வரவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அனைத்திலும் பணியாற்றி இருக்கிறேன் எங்கு வேணாலும் இருப்பேன். ரொம்ப வருடமாக இருக்கிறோம் நாங்கள் என்றும் பேசியுள்ளார்.
இதைதொடர்ந்து கதை கூறிவதற்காக ஓட்டலில் ரூம் போட சொல்லியுள்ளார் அஸ்வின். தயாரிப்பாளரும் அவருக்கு ரூம் போட்டு கதை கூற இயக்கனர் காத்திருந்துள்ளார். நேரம் செல்ல இயக்குனர் கால் செய்து பேசியதற்கு, இன்று எனக்கு மூடில்லை நாளை பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இதனால் கடுப்பாகிய தயாரிப்பாளர் வேறொரு நடிகருடன் பேசி படத்தி துங்கியிருக்கிறார்களாம்.