மலையாள திரைப்படம் ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. முதல் முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர் .
அதன்பிறகு சாய் பல்லவி மாரி-2, தியா, மற்றும் என்.ஜி.கே ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் இவர் நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்துள்ளது.
View this post on Instagram
இந்நிலையில் தற்போது சாய்பல்லவி பட்டுப்புடவையில் அம்சமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது