கடந்த இரண்டு நாட்களில் சிறிலங்காவில் வசூலான பெருமளவு பணம்!

இலங்கையில் கடந்த இரண்டு நாட்களில் விலங்கியல் பூங்கா திணைக்களத்துக்கு உட்பட்ட நிறுவனங்களில் 5,498,319 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகை தினமான 25,26 ஆம் திகதிகளில் இந்த வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய,தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவலை யானைகள் சரணாலயம் மற்றும் சவாரி பூங்காக்கள் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்கள் மூலம் இவ்வாறு வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.