விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகின்றனர். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ், குக் வித் கோமாளி என வித்தியாசமான நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் வெரைட்டி காட்டி மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா கதாபாத்திரம் நடந்து கொண்டே இருந்ததால் அதை மீம் மெட்டீரியல் ஆக்கி கலாய்த்து தள்ளினர் நெட்டிசன்கள். அதன்பின்பு அதன் டிஆர்பி எகிற ஆரம்பித்தது. கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியனுக்கு அடுத்து வினுஷா நடிக்க, அவருக்கு வில்லியாய் வெண்பா கதாபாத்திரத்தில் பரினா ஆசாத் நடித்திருப்பார். பரினா ஆசாத் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர்.
சில வருடங்களுக்கு முன் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனா, சற்று நாட்களுக்கு முன் ஆண் குழந்தைக்கு தாய் ஆனார். தற்போது புஷ்பா பட பாடல் ஆன “ஓ சொல்றியா மாமா” பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட். அதற்கு நடனம் ஆடி வீடியோ ஒன்று Farina போட, பற்றிக்கொண்டது இன்டர்நெட்.