பாலிவுட் ஏஞ்சல் என வர்ணிக்கப்படும் ஆலியா பட் கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களின் மூலம் இந்தி சினிமாவின் முன்னனி நடிகையாக வலம்வந்தார்.
இவரின் படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களும் அடிமை. பேச்சு குறும்புத்தனம் என சுட்டிகளை காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆலியா, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் எனும் பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் நேரடியாக படம் நடிக்காவிட்டாலும், இந்த படம் வெளியானதும் தமிழில் நடிக்க அதிக வாயப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ஆர்ஆர் படம் வரும் ஜனவரி 7ம் தேதி திரைக்கு வர உள்ளது. சமூக வலைளதங்களில் ஆக்டிவ் வாக இருக்கும் ஆலியா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவது வழக்கம்.
இந்த முறை இவர் வெளியிட்ட போட்டோக்களை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் கடுகு சிறுசா இருந்தாலும் காரம் குறையாது என இரட்டை அர்த்த வசனங்களில் கலாய்த்து வருகின்றனர்.