பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், டிக்கெட் டு ஃபினாலேவை வெல்வதற்கான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. சந்தோஷமாக துவங்கப்பட்ட இந்த டாஸ்க், இப்போது அடித்துக் கொண்டு சாகும் அளவிற்கு ரணகளமாக மாறி உள்ளது.
டாஸ்கின் முதல் நாளில் அதிகமானவர்களால் தேர்வு செய்யப்பட்டு, நிரூப் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், விறுவிறுப்பாக செல்லும் இந்த டாஸ்கில் இன்றைக்கான ப்ரோமோவில், ஒன்னும் இல்லாத விஷயத்தை பலூன் போல ஊதி பெரிதாக்குவது யார் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு, பிரியங்கா முகம் வைக்கப்பட்ட போர்டின் மீது போட்டியாளர்கள் சரமாரியாக தாக்குகின்றனர்.
இதனால் இந்த டாஸ்கிலும் பிரச்சினை வெடிக்கும் என தெரிகிறது.