ஒமைக்ரானை எதிர்கொள்ள பூஸ்டர் தடுப்பூசிகள் வேகமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்தது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு பெயர்கள் சூட்டப்பட்டன.
இதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு டெல்டா எனப் பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் மற்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் தொற்றுகளை விட வீரியம் மிக்கதாக இருந்ததால், இந்தியாவில் 2-வது அலை உருவானது. சில வெளிநாடுகளையும் புரட்டி போட்டது.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் பணத்தை தண்ணீராக செலவழித்து தடுப்பூசிகளை செலுத்தும் பணியை துரிதப்படுத்தியது.