அமீரின் காதலை கொச்சைப்படுத்திய பிரியங்கா

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், டிக்கெட் டு ஃபினாலேவை வெல்வதற்கான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. சந்தோஷமாக துவங்கப்பட்ட இந்த டாஸ்க், இப்போது அடித்துக் கொண்டு சாகும் அளவிற்கு ரணகளமாக மாறி உள்ளது.

டாஸ்கின் முதல் நாளில் அதிகமானவர்களால் தேர்வு செய்யப்பட்டு, நிரூப் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இன்றைக்கான அடுத்த ப்ரோமோ காட்சியில், பிரியங்கா, அமீரை கண்டு பாவனி மேல இருக்க அன்பவை வைத்து இந்நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார் என கூறியிருக்கிறார்.

அதற்கு அமீர், அவள பிடிக்கும் அந்த அன்பு வேற ஆனா நான் இங்கே கேம் விளையாட தான் வந்திருக்கேன். நீ எம்மேள வைச்சுருக்க அன்பு பொய் என பேச, பிரியங்கா தேவையில்லாம வார்த்தை விடாத எச்சரிக்கிறார்.