கொரோனா வைரஸ் ஒரு பக்கம் வேகமாக பரவி வரும் நிலையில், உலக முழுக்க ஓமிக்ரோன் வைரஸுன் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 22 மாநிலங்களில் ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் 653 பேர் ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 165 பேருக்கு ஓமிக்ரோன் இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் ஏற்கனவே 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, தமிழ் சினிமாவில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதனுக்கு ஓமிக்ரோன் தொற்று பாதித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஓமிக்ரோன் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.