பயங்கரமான ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்ட சமந்தா…

நடிகை சமந்தா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒரு நடிகை. தமிழ், தெலுங்கில் கலக்கிவந்த சமந்தா இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.

அண்மையில் ஹாலிவுட் பட அறிவிப்பையும் சமந்தா அறிவிக்க ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.

எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் அவர் தற்போது ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதிகமான பலுவை தூக்கி செய்யும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் சமந்தா தெறி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை சமந்தா, நாக சைத்தன்யாவுடனான விவாகரத்துக்கு பிறகு அதிக போட்டோ ஷுட் செய்வது, சுற்றுலா செல்வது, படங்கள் அதிகம் கமிட்டாவது என செம பிஸியாக இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் அவர் கோவா சென்ற புகைப்படத்தை வெளியிட ரசிகர்களிடம் செம வைரலானது.

இதோ அவர் இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்ட வீடியோவின் புகைப்படம்