பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.
இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.
இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.
தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பாலுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா (Golden Visa) வழங்கப்பட்டது. அதை வாங்கிய உற்சாகத்தில் Flight ஏறிய அமலா பால், அங்க சரக்கடித்து வரும் Photo பயங்கர வைரல்.