மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை காளிச்சரண் மகராஜ் பாராட்டி பேசி இருந்தார்.
மகாத்மா காந்தி குறித்து தவறான வார்த்தைகளை பயன்படுத்திய சாமியார் காளிசரண் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்து மத தலைவர் காளிச்சரண், கடந்த டிசம்பர் 26-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் ராயப்பூரில் நடைபெற்ற ஆன்மீக மாநாட்டில் பங்கேற்று பேசியபோது, பிற மதங்கள் குறித்தும், மகாத்மா காந்தி குறித்தும் தவறான வார்த்தையை பயன்படுத்தினார். மேலும் மகாத்மாவை சுட்டுக் கொன்ற கோட்சேவை பாராட்டி பேசினார்.
அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரை அடுத்து காளிச்சரண் மீது ராய்ப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து அவரை தேடி வந்த போலீசார், காளிச்சரண் மகராஜை மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோ அருகே இன்று அதிகாலை 4 மணி அளவில் கைது செய்தனர்.