நகைச்சுவை வேடங்களில் நடித்த ரங்கம்மா பாட்டி தற்போது போதிய திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் வறுமையில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரெங்கம்மா பாட்டி தள்ளாத வயதிலும் டைலாக்கை மறக்காமல் பேசும்திறன் கொண்டவர். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். எனினும், சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று பிழைப்பை நடத்தி வந்துள்ளார்.
பின்னர் அவருக்கு நடிகர் சங்கம் உதவி தொகையாக 5000 ரூபாய் வழங்கியுள்ளது.
இதையடுத்து சென்னையில் உடல்நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வந்த ரங்கம்மா பாட்டியை அவரது உறவினர்கள் அவர் பிறந்த ஊரான கோவைக்கே அழைத்துச்சென்று, கவனித்து வருகின்றனர்.
உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் தான் மீண்டும் நடிப்பேன் என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார். அவ்வப்போது தனது நடிப்பை காணொளியில் பார்த்து ரசித்து வரும் ரங்கம்மா பாட்டி மீண்டும் நடிக்க தயாராகி வருவதாக கூறியுள்ளார்.
அதோடு யாரிடமும் இதுவரை உதவி கேட்கவில்லை என்றும், யாரேனும் உதவிக்கு வருவார்கள் என நம்பிக்கை இருப்பதாகவும் ரங்கம்மா பாட்டி கூறியுள்ளார்.