புத்தாண்டை கொண்டாடா பிளான் பண்ணிய சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இதுமட்மின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் இணையத்தில் சென்சேஷன் கிரியேட் ஆனது.

இதனிடையே தற்போது கோவாவிற்கு தனது தோழிகளுடன் ட்ரிப் சென்றுள்ள சமந்தா, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் சமந்தா 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டை அவர் கோவாவில் கொண்டாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரின் நெருக்கமான நண்பர்கள் மற்றும் அவர் வளர்த்துவரும் நாய்க்குட்டி உடன் புத்தாண்டு கொண்டாட அவர் கோவா சென்றுள்ளதாகவும் கோவாவில் அவர் இந்த புத்தாண்டை சிறப்பாக கொண்டாட உள்ளார் எனவும் கூறப்படுகிறது.