இந்தியாவில் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 1,270 ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை, ஒரே நாளில் 1,431 ஆக அதிகரித்து உள்ளது.
ஒமைக்ரான் தொற்றிலிருந்து 450 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 943 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மேலும், நாட்டின் 23 மாநிலங்களில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 454 பேர் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவதாக தலைநகர் டெல்லியில் 351 பேர் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் 109 பேரும், குஜராத் மாநிலத்தில் 115 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் 69 பேரும், தெலங்கானா மாநிலத்தில் 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நம் தமிழகத்தில் 46 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மேலும், 74 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 120 பேர் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 66 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.