மெல்லிய கோடுகள், பிக்மண்டேஷன், நிறமாற்றம், சீரற்ற அமைப்பு மற்றும் சுருக்கங்கள் உள்ளிட்ட தோல் பிரச்சினைகள் இந்த நாட்களில் பொதுவானதாகிவிட்டன.
“மன அழுத்தம், அதிகரித்து வரும் மாசு அளவு, மோசமான ஊட்டச்சத்து மற்றும் நீல ஒளியின் வெளிப்பாடு ஆகியவை முன்கூட்டிய முதுமைக்கு காரணம் ஆகும். மேற்கூறிய காரணிகளால் 70 வயது முதியவர்களைப் போன்ற தோல் அமைப்பு மாறிய, 25 வயதுடையவர்களைப் பற்றிய வழக்குகளை நாங்கள் அதிகம் பெறுகிறோம். இருப்பினும், வழக்கமான தோல் பராமரிப்பு வழக்கத்தை இணைப்பதன் மூலம் இதுபோன்ற தோல் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, முன்கூட்டிய முதுமையைத் தடுப்பதற்காக ஊட்டச்சத்தை பம்ப் செய்ய Profhilo உள்ளிட்ட சில ஊசி மூலம் தோல் மறுவடிவமைப்பு சிகிச்சைகளையும் ஒருவர் தேர்வு செய்யலாம்” என்று சூரத்தில் உள்ள தோல் மருத்துவர், அழகுசாதன நிபுணர் மற்றும் லேசர் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அமி ஷா கூறினார்.
சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் பராமரிக்க வல்லுநரிடமிருந்து சில அத்தியாவசிய குறிப்புகள் இங்கே:
உங்கள் 20களில்
தோல் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவதை விட தடுப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
மந்தமான தோல், வெடிப்புகள், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை, இந்த வயதில் எதிர்கொள்ளும் முக்கிய தோல் பிரச்சினைகள். இவை அனைத்தும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் நிகழ்கின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சத்தான உணவு மற்றும் நல்ல தூக்கத்தைப் பின்பற்றுவது அவசியம்.
தோல் பராமரிப்பு முறை கீளீன்சர், டோனர் மற்றும் மாய்ஸ்சரைஸை (CTM) உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். படுக்கைக்குச் செல்லும் போது ஒருபோதும் மேக்கப் போடாதீர்கள். உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தாலும் உங்கள் சருமத்தை நன்கு ஈரப்பதமாக வைத்திருங்கள். உங்கள் மாய்ஸ்சரைசர் மற்றும் டோனரில் ஹைலூரோனிக் அமிலம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சருமம்’ சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுக்கு வெளிப்படுவதால் சன்பர்ன்ஸ் (Sun burns), ரேஷஸ், தடிப்புகள், அரிப்பு, தோல் புற்றுநோய் ஏற்படுகிறது. எனவே வெளியே செல்லும்போது அவசியம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் சன்ஸ்கிரீன் HCV மற்றும் இரும்பு ஆக்சைடு தவிர, UVA மற்றும் UVB கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
இந்த வயதில் தோல் பிரச்சினைகளை புறக்கணிக்காதீர்கள். இந்தப் பிரச்சினைகளை முழுமையாகக் கவனித்துக்கொள்ள, சில மருத்துவ சிகிச்சைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உங்கள் 30களில்
சரியான ஊட்டச்சத்தை உட்கொள்வதில் அதிக கவனம் செலுத்துங்கள், ஏனெனில் இது வளர்சிதை மாற்றத்தை குறைக்கும் வயது.
உங்கள் தோல் நிபுணருடன் கலந்தாலோசித்த பிறகு, உங்கள் தோல் பிரச்சினையைப் பொறுத்து, உங்களுக்கு பரிந்துரைத்த தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற வேண்டும், ஏனெனில், இது வீக்கம் அதிகமாக ஏற்படும் வயது.
உங்கள் 40களில்
நீரேற்றம் இழப்பு, தொய்வு மற்றும் சுருக்கங்கள் இந்த வயதில் முக்கிய தோல் பிரச்சினைகள்.
கொலாஜனை உருவாக்குதல் மற்றும் ஹைலூரோனிக் அமிலத்தை உட்செலுத்துதல் போன்ற சில தோல் சிகிச்சைகளை கடைபிடிக்க வேண்டும்.
உங்கள் உடலின் எடையைக் கவனியுங்கள், ஆரோக்கியமான உடல் மற்றும் சருமத்திற்கு சரியான பிஎம்ஐயை பராமரிப்பது முக்கியமானது.
இந்த செயல்முறை உண்மையில் உங்கள் 30 களில் இருந்து தொடங்க வேண்டும், ஏனெனில் உங்கள் 40 களில் திடீரென எடையை பராமரிப்பது கடினமாகிவிடும்.
அதிக உடல் எடை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பல்வேறு தொற்றா நோய்கள், உங்களை எளிதில் பாதிக்கலாம்.
இந்த வயதினருக்கு நேர்மறை எண்ணமும் அவசியம், ஏனெனில் இது மாதவிடாய் நிற்கும் நேரம். மாதத்தில் ஒருமுறை, உங்கள் தோல் நிபுணரை கட்டாயம் பார்வையிடவும்.