நீரிழிவு நோயாளர்கள் வேர்கடலையை ஊறவைத்து சாப்பிடலாமா?

வேர்க்கடலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு உணவுப்பொருள்.

வேகவைப்பதாலும், வறுப்பதாலும் வேர்க்கடலை அதன் சத்துக்களை இழந்து விடுகிறது.

பச்சையாக ஊறவைத்து சாப்பிடுவதே நன்று.

வேர்க்கடலையை ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்தால் பித்தம் அதிலிருந்து நீங்கிவிடும். இதனை நன்கு கழுவிவிட்டுச் சாப்பிடலாம். ஊறவைக்காமல் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும்.

ஊறவைத்த வேர்க்கடலையை நன்றாக மிக்ஸியில் அரைத்து, மற்ற பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, சல்லடையில் அரித்து அல்லது அரிக்காமல் அப்படியே பருகலாம்.

இனி யாரெல்லாம் வேர்கடலை சாப்பிடலாம்… அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.

எடை இழப்பிற்கான முயற்சியில் ஈடுபடுகிறவர்கள் மிதமான அளவு வேர்க்கடலை உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.
இது பசியுணர்வை குறைத்து வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து , தேவையற்ற உணவுகள் உட்கொள்வதைத் தடுக்க உதவுகிறது.
உங்கள் மூளை மிகவும் சுறுசுறுப்பாக மற்றும் கூர்மையாக செயல்பட முடிகிறது.
இதில் உள்ள நார்ச்சத்தானது ஜீரண கோளாறு சரி செய்கிறது.
அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி போன்ற அனைத்து உபாதைகளை சரி செய்கிறது.
வேர்க்கடலையில் உள்ள ஜின்க் சத்து, தெளிவான பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தை உடல் இடமாற்றம் செய்ய உதவுகிறது.
வேர்க்கடலையில் உள்ள வைட்மன் ஈ சத்து, வயது தொடர்பான படர்ந்த நசிவு மற்றும் கண்புரை உருவாவது போன்ற பாதிப்புகளைத் தாமதப்படுத்த உதவுகிறது.
வேர்க்கடலையில் சர்க்கரை முற்றிலும் இல்லை என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு முற்றிலும் பாதுகாப்பான ஒரு உணவாக விளங்குகிறது வேர்க்கடலை.
வேர்க்கடலை பல்வேறு ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குகிறது மற்றும் மிகவும் சுவை மிகுந்தது.