தயிர் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா?

தயிரை தினமும் உணவின் ஒரு அங்கமாக சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகளைப் பெறலாம். ஏனெனில் இதில் எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது.

குறிப்பாக இதில் கால்சியம், வைட்டமின் பி -2, வைட்டமின் பி -12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.

இருப்பினும் சிலருக்கு இதனை தினமும் எடுத்து கொள்வதனால் உடல் எடை அதிகரிக்குமா என்ற சந்தேகம் காணப்படும். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

தினமும் தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு தயிரில் இருக்கும் ஒரு நல்ல அளவு புரதம் பெரிதும் உதவுகிறது. தயிரில் இருக்கும் புரதம் பசியுணர்வை கட்டுக்குள் வைத்து தேவையற்ற ஸ்னாக்ஸ்களை சாப்பிடுவதை தவிர்க்க செய்கிறது.

நமது செரிமான அமைப்புக்கு நன்மை தரும் உயிரியல் சார்பு கூறுகளின் செறிவு தயிரில் அடங்கி உள்ளது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதிலும், உடல் எடையை சீராக்குவதிலும் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது.

கால்சியம் நிறைந்துள்ள தயிர் எடையை குறைக்க உதவுகிறது. தெர்மோஜெனீசிஸின் செயல்முறையை அதிகரிக்க கால்சியம் உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலில் இருந்து தேவையற்ற எடையை அகற்ற உதவுகிறது.
தினம் எவ்வளவு சாப்பிடலாம்?

சீரான எடை குறைப்பிற்கு தினமும் ஒரு கப் தயிர் எடுத்து கொண்டாலே போதும். உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க தினமும் ஒரு கப் தயிர் எடுத்து கொள்ளுங்கள்.