அத்தியாவசிய பொருள் ஒன்றின் விலை மீண்டும் அதிகரிப்பு… வெளியான தகவல்!

இலங்கையில் அரிசி விலை சந்தையில் மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.10இல் இருந்து ரூ.30 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த விலை உயர்வுக்கு குறிப்பிட்ட வகை அரிசி வரத்து குறைவாக இருப்பதே காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அரிசியின் விலை தொடர்பில் முன்னணி அரிசி ஆலை உரிமையாளர்கள் மீண்டும் கலந்துரையாடி அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரிசி விலை கட்டுப்பாட்டில் இருந்து அரசாங்கம் அண்மையில் விலகியதைத் தொடர்ந்து அரிசி வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்து வருகின்றனர்.

மேலும், இன்றையதினம் (01-01-2022) சிமெந்தின் விலை ரூபா 100 ஆல் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.