பீட்ரூட் அல்வா… செய்வது எப்படி..?

இனிப்பு என்றால் குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் அல்வாவை கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே சுவையாக செய்யலாம். பீட்ரூட் அல்வா எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

துருவிய பீட்ரூட் – 1 கப்

பால் – 1 1/2 கப்
முந்திரி – 5
நெய் – 1 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி துருவிய பீட்ரூட்டை கொட்டி கிளறவும். பச்சை வாசனை போனதும் அதில் பால் சேர்த்து ஏலக்காய் தூள், முந்திரி, நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கிளறவும். அல்வா பதம் வரும் வரை கிண்டவும்.

*பீட்ரூட் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி குளிர்ச்சியை தரும். கண்கள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.