தென் மாகாணத்தில் தாதியர் சேவை, துணை சேவை மற்றும் இடைக்கால மருத்துவ சேவையில் உள்ளவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து காலை 7 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் 16 சுகாதார சங்கங்கள் இணைந்துள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித் துள்ளது. இந்நிலையில் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கத் தவறினால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
எனினும் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித் தார்.
உரிய சம்பள உயர்வு வழங்கப்படாதது, கொடுப்பனவு களில் முரண்பாடுகள், துணை சுகாதார ஊழியர்களுக்கு பதவி மற்றும் சம்பளம் வழங்கப்படாமை, அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கை 13,000 பதவி உயர்வுகள் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் குறித்த நிறுத்தப் போராட்டமானது முன்னெடுக்கப்படுகிறது.
மேலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பல மாகாணங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.