மதுபான விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகை…!!

தற்போது உள்ள காலக்கட்டத்தில் திரையில் ஒரு முறை நடித்து விட்டாலே, மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். அதிலும், நடிகைகள் என்றால் ஒரு குத்தாட்டம் போட்டலே போதும், பேமஸ் ஆக்கி விடுவார்கள் நெட்டிசன்கள்.

இதனை பயன்படுத்தி, நடிகைள் சினிமாவில் நடிப்பதை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதித்து விடுவார்கள். தங்களுக்கு மார்க்கெட் இல்லை என்றாலும், சமூக வலைதளங்களில் கவர்ச்சியான வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டு தங்களை ஆக்டிவாக இருப்பதைக் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை நிதி அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் மதுபாட்டிலுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், மதுபாட்டிலை திறந்து கையில் உள்ள கிளாசில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்;ப்பது போன்று வீடியோ இருக்கிறது. இந்த வீடியோ சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகை நிதி அகர்வால், இளைஞர்களை மது அருந்த தூண்டுவதாக சமூக ஆர்வலர்கள் விமரிசித்து வருகின்றனர்.

சமீபத்தில் முன்னணி நடிகைகள் ஹன்சிகா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் அதிக பணம் வாங்கிக்கொண்டு வெளிநாட்டு மதுபானங்களை அவர்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.