பஞ்ச தந்திரம் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா

கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய எத்தனையோ படங்கள் செம ஹிட், அதில் ஒன்று தான் பஞ்ச தந்திரம்.

படத்தின் கதை, பாடல்கள், பிரபலங்களின் நடிப்பு முக்கியமாக வசனம், புதிய விதமான காமெடி என ஒட்டுமொத்தமாக ரசிக்கும் வண்ணம் படம் இருக்கும்.

எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் படத்தை மக்கள் விரும்பி பார்ப்பார்கள்.

படத்தில் எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும், அப்படி முக்கியமான கதாபாத்திரத்தில் ஒன்று ரம்யா கிருஷ்ணன் நடித்தது தான். மேகி என்ற பெயரில் அசத்தலாக நடித்திருப்பார்.

ஆனால் முதலில் அவரது வேடத்தில் நடிக்க வைக்க நக்மாவை தான் முதலில் கேட்டுள்ளனர். ஆனால் 30 நாட்களில் உடல் எடை குறைத்து ஒல்லியாக வேண்டும் என்று படக்குழு கூறியதால் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

பின்பே நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க வந்துள்ளார்.