பிக்பாஸில் TRP-காக செய்யும் வேலைகள்

பிக் பாஸ் தான் தற்போது தமிழ் நாட்டில் சென்சேஷனாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது.

நான்கு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஐந்தாவது சீசன் 95 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த பிக் பாஸ் 5வது சீசனில், இந்த வாரம் 12 லட்சம் பணப்பெட்டியுடன் சிபி வெளியேறியுள்ளார்.

இவரை தொடர்ந்த இந்த வாரத்தின் இறுதியில் மற்றும் ஒரு போட்டியாளர் குறைந்த வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த பலருக்கும் தெரியாத ஒரு உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்திற்கு குறைவு இருந்தால், TRP-காக சில சண்டைகளையும், காதல் காட்சிகளையும் செய்ய சொல்லி குறிப்பிட்ட போட்டியாளர்களிடம் கூறுவார்களாம்.

அதன்படி, அந்த போட்டியாளர்களும் நடந்துகொண்டு, பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்கள். இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் TRP உச்சத்திற்கு செல்கிறது.

இதன்முலம், பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் அணைத்து விஷயங்களும் உண்மையில்லை, சிலது ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு ஒளிபரப்பு ஆகிறது என கூறுகின்றனர்.