மாநாடு வெற்றிக்கு பின் சிவகர்த்திகேயனுடன் இணைந்த வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் இயக்கிய மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது, இதனால் அவரின் அடுத்தடுத்த திரைப்படங்களின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில் வெங்கட் பிரபு நடிகர் அசோக் செல்வனை வைத்து படம் ஒன்றை விரைவாக முடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் பான் இந்தியன் படம் ஒன்றையும் அவர் இயக்கவுள்ளார்.

இதனிடையே தற்போது வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சிவகார்த்திகேயன் அடுத்த நடிக்கவுள்ள SK 20 திரைப்படத்தை இயக்குனர் அனுதீப் என்பவரை இயக்கவுள்ளார். அப்படத்தில் தான் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்துள்ளார்.

தமிழ் வெர்ஷன் SK 20 படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.