தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு.
இவர் ஸ்பைடர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்நிலையில், நாடுமுழுவதும் மக்களை விடாமல் துரத்தி வரும் கொரோனா தோற்று மகேஷ் பாபுவையும் விட்டுவைக்கவில்லை.
ஆம், தனக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக நடிகர் மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அவருடைய ரசிகர்கள், விரைவில் குணமடைய வேண்டி வருகிறார்கள்.