பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மற்றுமோர் போட்டியாளர்

பிக் பாஸ் சீசன் 5 தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் ஒரு குறிப்பிட்ட தொகையை அறிவித்து இதனை யார் பெற்றுக் கொண்டு போட்டியிலிருந்து வெளியேற விரும்புகிறீர்கள் என கேட்டார்.

அப்போது ரூ.12 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு முக்கிய போட்டியாளரான சிபி பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இந்த நிலையில் மீதமுள்ள போட்டியாளர்களில் அமீரை தவிர மற்ற 5 நபர்களில் யார் குறைந்த வாக்குகளை பெறுகிறாரோ அவர் வெளியேற்றப்படுவார்.

பிக் பாஸ் வீட்டில் தற்போது கடைசி எலிமினேஷனாக நிரூப் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.