யாழ் மாவட்டத்தில் இடம்பெற்று வந்த பல்வேறு சம்பவம் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து இரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுன்னாகம் – அம்பலவாணர் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலானாய்வு பிரினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் குற்றச் செயலர்களுடன் தொடர்புடைய இரு மோட்டார் சைக்கிள்களையும் அவர்கள் மீட்டுள்ளனர்.