நாட்டில் மிகவும் அத்தியாவசியமான சுமார் 80 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு போதுமான கடன் பத்திரிகைகளை திறப்பது தொடர்பில் பல்வேறு பிரச்சனைகளை இராஜாங்கம் எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த மாதம் 18 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டிய 500 மில்லியன் டொலர் கடன் தவணையைச் செலுத்தும் வரை மத்திய வங்கி, மருந்து இறக்குமதிக்கான டொலர்களை வெளியிடாமல் இருப்பது இதற்கான காரணம் எனவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் தற்போது அத்தியாவசிய மருந்துகளுக்கு கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள், எரிபொருள், மருந்து ஆகியவற்றை இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.