தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து குஜராத்தின் ராஜ்கோட் பகுதிக்கு சென்ற ரயில் ஒரு தம்பதி தங்கள் குழந்தையுடன் பயணம் செய்தது. அந்த குழந்தை அசைவில்லாமல் இருந்ததை பார்த்து மற்ற பயணிகள் சந்தேகமடைந்தனர்.
உடனடியாக இது குறித்து டிக்கட் பரிசோதகரிடம் தெரிவிக்கவே அவர் ரயில்வே காவலர்களுக்கு தகவல் அளித்தார். இதனை அடுத்து, சோலாப்பூர் ரெயில் நிலையத்தை அடைந்ததும், குழந்தையுடன் அந்த தம்பதியரை கீழே இறக்கினர். அந்த குழந்தையை பரிசோதித்ததில் அந்த குழந்தை இறந்தது தெரியவந்தது.
காவல்துறையின் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அந்த குழந்தையின் தந்தை பெற்ற பச்சிளம் குழந்தை என கூட பாராமல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
இதற்கு அந்த குழந்தையின் தாயும் உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.