யாழ் நகரத்தில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்த முதியவரிடமிருந்து பணத்தை பற்றித்துக் கொண்டு திருடன் தப்பியோடிள்ள சம்பவம் ஒன்று நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ் பழைய தபால்நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் முதியவர் ஒருவர் வீதிக்கு வந்துள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு, துவிச்சக்கர வண்டியில் திருடன் தப்பியோடியுள்ளார்.
முதயவரிடமிருந்து சுமார் 47,000 ரூபா பணம் இவ்வாறு அபரித்து செல்லப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.