நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இடம்பெறும் உணவு திருட்டினை நிறுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அதன் ஊழியர்களின் பையை திடீரென சோதனையிடும் வேலைத்திட்டம் ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஊழியர்கள் விசேடமாக நாடாளுமன்ற தொகுதியை விட்டு வெளியே வரும் சந்தர்ப்பத்தில் அதிக அளவில் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொண்டு வரும் உணவுகளில் 2 கோடி ரூபாய் பெறுமதியான உணவு வீணடிக்கப்படுவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.