யாழில் புதியவகை மலோியா நுளம்பு அடையாளம்..!!

  யாழ்.மாநகருக்குள் ஆபத்தான “அனோபீலிஸ் டிபென்ஸி” என்ற புதியவகை மலோியா நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்த மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், இது மிகவும் பாதகமான அனர்த்த நிலை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்க்கையில் அவர் இதனை கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தென்ஆபிரிக்காவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள சிலருக்கு மலேரியா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசேட சைவத்திய நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, யாழ்.மாநகர எல்லையில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நுளம்ப துரிதமாக பரவும் துரிதமாக பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.