சீனாவில் உள்ள கிங்காய் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவானது.
கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அருகில் இருக்கும் கன்சு, சாங்ஷி, உள்ளிட்ட மாகாணங்களிலும் உணர முடிந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாகவும் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் பீதியில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
மேலும் பாதிப்பு குறித்த மூழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்தாகும்.