மின்னல் போன்ற கவர்ச்சியால் கண்ணை பறித்த நடிகை திவ்யாபாரதி…!!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், நாச்சியார் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் ஜெயில் மற்றும் பேச்சிலர் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இதில் பேச்சிலர் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை திவ்யாபாரதி நடித்திருப்பார். தற்போது அவரது கவர்ச்சியான ஃபோட்டஷூட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.