நீரிழிவு நோயாளிகள் அச்சம் இன்றி சாப்பிடக் கூடிய ஒரு உணவு தான் பாகற்காய்.
ஒரு வாரம் தொடர்ந்து பாகற்காய் ஜூஸ் குடித்தால் நீரிழிவு மட்டும் இல்லை ஈரல் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
தேவையான பொருட்கள்
- பிஞ்சு பாகற்காய் – 100 கிராம்
- மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
- மோர் – 2 டேபிள்ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 6
- தக்காளி – 2
- சீரகம் – ஒரு டீஸ்பூன்
- மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
- அரிசி கழுவிய தண்ணீர் – 200 மில்லி
- சோள மாவு (கார்ன் ஃப்ளார்) கரைசல் – ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- தண்ணீர், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிஞ்சு பாகற்காயைச் சுத்தம்செய்து பொடியாக நறுக்கி மோர்விட்டு அரை மணி நேரம் கழித்து மோரிலிருந்து எடுத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கியபின் ஊறவைத்த பாகற்காயைச் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் அரிசி கழுவிய தண்ணீர், சோள மாவுக்கரைசல் சேர்த்து நன்கு வேகவைத்து மிளகுத்தூள் தூவி இறக்கவும். வடிகட்டி அல்லது அப்படியே பரிமாறவும். சத்து நிறைந்த பிஞ்சு பாகற்காய் சூப் ரெடி.