இந்தியாவில் தன்னை தானே கடத்திவிட்டு பணம் கேட்டு மனைவியை மிரட்டிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியின் ராஜிவ் நகரை சேர்ந்த தம்பதியினர் அனூப் யாதவ்- தீபிகா, அனூப் தீவிர கடன் சுமையில் சிக்கித் தவித்து வந்தார்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பமான மனநிலையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி தீபிகாவுக்கு போன் ஒன்று வந்துள்ளது, அதில் உன்னுடைய கணவரை கடத்திவிட்டோம், பத்திரமாக வேண்டுமென்றால் 2 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
இதில் பயந்து போன தீபிகா, அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், அனூப் சென்ற இடம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள், மொபைல் போனை வைத்து தேடியதில் அனூப் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது.
உடனடியாக அங்கு சென்று, அனூப்பை மீட்டதுடன் அவரிடம் விசாரித்ததில், கடன் சுமை காரணமாக தன்னை தானே கடத்திவிட்டு பணம் கேட்டு மனைவியை மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய மனைவி போலீசிடம் புகார் அளிப்பார் என தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அனூப் யாதவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.