ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் நாம் செய்யும் தவறுகள் காரணமாக அது இயங்கும் திறன் விரைவில் முடிவிற்கு வந்துவிடுகிறது.
ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது நம்மையும் அறியாமல் செய்யும் தவறுகள் நம்மை பிரச்சினையில் தள்ளி விடுகிறது.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பது குறித்து பார்ப்போம்.
ஸ்மார்ட்போனை எப்போதும் அரைகுறையாக சார்ஜ் செய்யக்கூடாது, முழுமையாக அதில் சார்ஜ் ஏற்ற வேண்டும். அரைகுறையாக அடிக்கடி சார்ஜ் செய்தால் அது பேட்டரியின் திறனை முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.
பலரும் ஸ்மார்ட்போன்களில் ப்ளூடூத்களை எப்போதும் ஆன் செய்தே வைத்திருப்பார்கள், இதனால் சார்ஜ் சீக்கிரம் இறங்கிவிடும். இந்த பிரச்சினை இதோடு முடிவதில்லை, ப்ளூடூத் மூலம் வைரஸ்கள் செல்போனுக்குள் நுழையும் வாய்ப்புகள் இருக்கின்றன.
அதே போல லொகேஷனையும் எப்போதும் ஆன் செய்து வைத்திருக்கக்கூடாது, இப்படி செய்தால் செல்போனில் உள்ள பல செயலிகள் லொகேஷனை டிராக் செய்து உங்களை கண்காணித்து கொண்டே இருக்கும்.
பார்வேர்ட் மூலம் செல்போனை லாக் செய்து வைத்திருந்தாலும், அதில் தனிப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை வைக்கக்கூடாது. ஏனென்றால் செல்போன் திடீரென பழுதாகி போனால் அதை சரி செய்ய கடையில் கொடுப்போம், அந்த சமயத்தில் மூன்றாம் நபர்கள் உங்கள் தனிப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களையும் பார்க்க நேரிடும். இது தேவையில்லாத பிரச்சினைக்கு வழிவகுக்கும்.
வீட்டில் ஜன்னல் ஓரமாகவோ அல்லது சூரிய ஒளி நேரடியாக படும் இடத்திலோ செல்போனை வைக்கக்கூடாது. ஏனெனில் சூரிய ஒளியால் மொபைல் சூடாகக்கூடும். இதனால் செல்போன் உள்ளிருக்கும் சிப் போன்ற பல பகுதிகள் பாதிக்கப்பட்டு அதன் ஆயுள் குறைய வாய்ப்புள்ளது.