நடிகை சமந்தா விவகாரத்துக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் தற்போது வரை எதிரொலித்து வருகிறது.
தியேட்டரில் புஷ்பா படம் பார்க்க சென்ற கூட்டத்தை விட, தியேட்டரில் ஓ சொல்றியா மாமா பாடலை பார்ப்பதற்காகவே சென்ற கூட்டம் தான் அதிகம்.
அந்த அளவுக்கு இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த பாடலில் நடிகை சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா கருப்பு பணியன்யோடு, எக்சசைஸ் செய்யும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.