பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது இன்றோடு 100-வது நாளை எட்டியிருக்கிறது. இந்த வாரம் ஃபினாலே வாரம் என்பதால் பெரிதாக டாஸ்க் ஏதும் கொடுக்கப்படவில்லை.
மேலும், யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற டென்ஷன் அனைவரிடமும் இருப்பதால் போட்டியாளர்களை fun- பண்ணும் விதமாக டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, 100-வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு நாள் பிக்பாஸ் டாஸ்க் என பெயரிடப்பட்டுள்ளது.
பிக்பாஸ் உங்களை ஆட்கொள்வார். அப்படி ஆட்கொள்ளப்படும் நபர் பிக்பாசாக மாறி செயல்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. இந்த டாஸ்கின் முதல் நபராக பிரியங்கா, பிக்பாசாக மாறுகிறார். அனைவரும் தினமும் இரண்டு மணி நேரம் தூங்க அனுமதிக்கப்படுகிறது என கூறுகிறார்.
மேலும், மற்றவர்கள் சிரிக்க, எல்லோரும் fun- பண்ணுங்க என பிக்பாஸ் குரலில் சொல்கிறார் பிரியங்கா. பிரியங்காவை போல் மற்றவர்களும் பிக்பாஸாக மாறி செயல்படுகிறார்கள்.
தொடர்ந்து ராஜூ பிக்பாஸாக மாறும் போது பிரியங்கா மெயின் டோர் வழியாக வெளியே வாங்க என சொல்கிறார். எப்படியும் இன்றைய நாள் சுவாரசியமாக செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.