தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.
இந்த நிலையில் கொரோனா தொற்று சினிமாத் துறையையும் விட்டுவைக்கவில்லை. கடந்த வாரம் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியது. மேலும், நடிகர் கமலஹாசன் மற்றும் விக்ரம் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 11, 2022
அடுத்ததாக திரிஷா, ஷெரின் மற்றும் சத்யராஜ் ஆகிய பிரபலங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இத்தகைய நிலையில், தற்போது பிரபல நடிகை கீர்த்தி சுரேஷூக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பது உறுதியாகியுள்ளது. இதனை, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்