தண்டவாளத்தில் மயக்கத்தில் கிடந்த தாய்: தவித்த 8 மாத குழந்தை! நடந்தது என்ன?

காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரு பெண்மணி 8- மாத ஆண் குழந்தையுடன் ரயிலுக்கு காத்திருந்ததாகவும், அவர் அடுத்த பிளாட்பார்ம்’க்கு குழந்தையுடன் கடக்க முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. அபோது அந்த பெண்மணி கால் தடுக்கி ரயில்வே தண்டவாளம் மீது விழுந்து தலையில் அடிபட்டு மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அந்த சமயம் எர்ணாகுளத்திலிருந்து பிளக்ஸ்பூர் செல்லும் ரயில் நிறுத்தத்தில் நிறுத்தும் போது ரயிலின் அடியில் தாயும் குழந்தையும் சிக்கிக்கொண்டார்கள்.

இதனையடுத்து ரயில்வே போலீசார் விரைந்து வந்து குழந்தையும் தாயும் உயிருடன் மீட்டனர். குழந்தைக்கு காயங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் அக்குழந்தையின் தாயிக்கு மட்டும் அடிபட்டதால் அவர் மயங்கிய நிலையில் உள்ளார். இருவரையும் மீட்ட போலீஸார் ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், எர்ணாகுளம் ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நிற்கும் பட்சத்தில் இவர் கால் தடுக்கி விழுந்தார் என தெரிகிறது.

ரயில் தண்டவாளம் இடையில் விழுந்ததால் குழந்தையும் தாயும் உயிருடன் இருக்கிறார்கள். அடிபட்ட பெண் மயக்க நிலையில் உள்ளதால் இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என இதுவரையில் தெரியவில்லை. அவர் மயக்கம் தெளிந்த பிறகே தெரியவரும் அவரிடத்தில் எந்த அடையாள அட்டைகள் எதுவும் இல்லை என கூறினர். தாயையும் 8- மாத ஆண் குழந்தை காப்பாற்றிய இச்சம்பவம் ரயில்வே போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.